விருதுநகர்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சுதந்திர தினத்தன்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் குமரி ஆனந்தன் விருதுநகரில் காமராஜர் சிலையிடம் மனு கொடுத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இதுவரை 36 சிறப்பு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் இமயம் முதல் குமரி வரை மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற மசோதாவை 37வது மசோதாவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என்றும் குமரி ஆனந்தன் கோரிக்கை விடுத்தார்.

