கொள்ளையரை விரட்டிய தம்பதி

கொள்ளையரை விரட்டிய தம்பதி

1 mins read
199a9c73-c731-4450-a50b-e11f81de5dd2
கொள்ளையர்களுடன் போராடும் தம்பதி. படம்: இைணயம் -

நெல்லை: நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதி இருவரும் தங்கள் வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து அரிவாள் முனையில் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்களை நாற்காலி உள்ளிட்ட பலவற்றையும் கொண்டு தாக்கி விரட்டியதைக் காட்டும் காணொளி பரபரப்பாகி உள்ளது.

கொள்ளையர்கள் முகமூடி யுடன் கையில் அரிவாள் வைத்துக்கொண்டு இருந்ததால் முதலில் திடுக்கிட்ட சண்முகவேலு, தன் கழுத்தை ெநரித்த கொள்ளையனை துணிச்சலுடன் தாக்கினார்.

செந்தாமரை கைகளில் வெட்டிய கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையுடன் தப்பிவிட்டனர். போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.