அத்திவரதர் சிலை வரும் 17ல் குளத்தில் வைக்கப்படும்

அத்திவரதர் சிலை வரும் 17ல் குளத்தில் வைக்கப்படும்

1 mins read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 16ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிகிறது என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

அத்திவரதர் சிலை 17ஆம் தேதி ஆகம விதிப்படி குளத்தில் வைக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

இந்து சமய அபூர்வ கடவுளான ஆதி அத்திவரதரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் கிைடக்கும். இந்த ஆண்டு கிடைத்துள்ள அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த 43 நாட்களில் 90 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.