போலிசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

போலிசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

1 mins read

திண்டுக்கல்: குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதாகவும் அத்தகைய சந்தேக நபர்கள் காயம் அடைவதாகவும் தெரியவருவதால் போலிஸ் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

தமிழகத்தில் காவல்துறையின் துன்புறுத்தலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அச்சங்கம், தமிழக காவல்துறையின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல் களைத் தான் கண்டிப்பதாகவும் அண்மைய சம்பவங்கள் போலிஸ் மீதான சந்தேகங்களை உறுதிப் படுத்துவதாகவும் குறிப்பிட்டது.