பழனிசாமி: காவிரியில் 3 தடுப்பு அணைகள்

மேட்டூர்: விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், காவிரி ஆற்றில் மேலும் மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என்றார்.

மேலும், காவிரி, கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றும் என்றும், இதன் பலனாக பாசனத்துக்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குவதாகக் குறிப்பிட்ட முதல்வர், அதிமுக ஆட்சியில் தான் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பொதுப்–ப–ணித்–து–றைக்கு சொந்–த–மான 14 ஆயி–ரம் ஏரி–களும் உள்–ளாட்–சி–க–ளுக்கு சொந்–த–மான 39 ஆயி–ரம் குட்–டை–களும் தூர்–வா–ரப்–படும். மேட்–டூர் அணை–யில் கிழக்கு மேற்கு கால்–வாய்–களில் 137 நாட்–க–ளுக்கு தண்–ணீர் திறக்–கப்–படும்.

“காவி–ரி– ஆற்–றின் குறுக்கே 2 தடுப்–ப–ணை–கள் கட்–டும் பணி நடை–பெற்று வரு–கிறது. மேலும் 3 தடுப்–ப–ணை–கள் கட்ட நட–வ–டிக்கை எடுக்–கப்–படும்,” என்–றார் முதல்–வர் பழ–னி–சாமி.

மேட்–டூர் அணை திறக்–கப்–பட்–ட–தால் 16.05 லட்–சம் ஏக்–கர் விவ–சாய நிலங்–கள் மேட்–டூர் அணை நீரால் பாசன வசதி பெறும். இந்–நி–லை–யில், ரூ.25 ஆயி–ரம் கோடி செல–வில் மேடான பகு–தி–க–ளுக்கு மேட்–டூர் அணை–யின் உபரி நீரை கொண்டு செல்–லும் திட்–டத்–தைச் செயல்–ப–டுத்த இருப்–ப–தாக முதல்–வர் மேலும் தெரி–வித்–துள்–ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!