சென்னை: தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு 1,544 வழக்குகள் பதிவாகின என்றும், 2016ஆம் ஆண்டில் மட்டும் 1,567 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மிக அதிகபட்சமாக 156 வழக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும், விழுப்புரம், 105, வேலுார் 99, கரூரில் 13 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 4,587 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதையடுத்து இத்தகைய குற்றச்செயல்களின் எண்ணிக் கையைக் குறைப்பதற்கு காவல் துறை உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

