எஜமானர்களின் உயிரைக் காக்க தன் உயிரை விட்ட செல்லப்பிராணி

மதுரை: வீட்டில் புகுந்த முகமூடி கும்பலை விரட்டியடிக்கப் போராடிய தன் எஜமானர்களைக் காப்பாற்ற அவரது செல்லப்பிராணி உயிர்விட்ட சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் செந்தில். நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குள் நுழைந்த முகமூடிக் கும்பல் 

பட்டாக்கத்தியால் வெட்டியது. கணவரின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த மனைவி தமிழ்செல்விக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் அலறியபடியே அக்கும்பலை விரட்டப் போராடினர். இந்நிலையில் அங்கு ஓடி வந்த செந்திலின் செல்லப்பிராணியான நாய் வீட்டில் புகுந்தவர்கள் மீது பாய்ந்தது. ஆனால் அவர்கள் அதையும் வெட்டிச் சாய்த்தனர். எனினும் நாயின் இடைவிடாத குரைப்புச் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அக்கும்பல் தப்பி ஓடியது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கைதான போலிஸ்காரர் மணிராஜன், கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் தரகர் ராஜீவ்காந்தி. படம்: தமிழக ஊடகம்

07 Dec 2019

போலிசில் சேர பெரும் மோசடி: பலர் கைது; தீவிர விசாரணை