பருவ மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்: கர்நாடகாவில் பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் 1.5 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 50 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. முன்னதாக பருவ மழை தீவிரமாக இருந்ததால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  100 அடியைத் தாண்டியது. இதற்கிடையில் பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.