நளினி உரிமை கோர முடியாது என அரசு வாதம்

சென்னை: தம்மை முன்–கூட்–டியே விடு–தலை செய்ய உத்–த–ர–வி–டக் கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்–ற–வாளி நளினி தாக்–கல் செய்த மனு–வுக்கு தமி–ழக அரசு எதிர்ப்பு தெரி–வித்–துள்–ளது.

விடு–தலை செய்–வதை நளினி தமது உரி–மை–யாக கோர முடி–யாது என தமி–ழக அரசு சுட்–டிக்–காட்டி உள்–ளது.

தமி–ழக அரசு சார்–பாக, உள்–துறை செய–லர், வேலூர் மக–ளிர் சிறை கண்–கா–ணிப்–பா–ளர் ஆகிய இரு–வ–ரின் பேரில் இந்–தப் பதில் மனு உயர் நீதி–மன்–றத்–தில் தாக்–கல் செய்–யப்–பட்–டது. 

“ஆயுள் தண்–ட–னைக் கைதி–களை முன்–கூட்–டியே விடு–தலை செய்–வது அர–சின் தனிப்–பட்ட அதி–கா–ரத்–திற்கு உட்–பட்–டது. 

“எனவே அக்–கை–தி–கள் தங்–களை முன் கூட்டி விடு–தலை செய்ய வேண்–டும் என உரி–மை–யாக கோர முடி–யாது,” என்–பதே நளினி மனுவுக்கு அர–சுத்–த–ரப்–பில் அளிக்–கப்–பட்–டுள்ள பதி–லா–கும்.

எனவே நளி–னியை முன் கூட்டி விடு–தலை செய்ய கோரிய மனுவை தள்–ளு–படி செய்ய வேண்–டும் என–வும் தமி–ழக அர–சுத் தரப்–பில் வலி–யு–றுத்–தப்–பட்–டுள்–ளது. இந்த மனு மீதான அடுத்–தக்–கட்ட விசா–ரணை எதிர்–வ–ரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்–கப்–பட்–டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கைதான போலிஸ்காரர் மணிராஜன், கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் தரகர் ராஜீவ்காந்தி. படம்: தமிழக ஊடகம்

07 Dec 2019

போலிசில் சேர பெரும் மோசடி: பலர் கைது; தீவிர விசாரணை