சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி கோவில் பொதுவிருந்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் 'ராக்கி' கட்டினார்.
சுதந்திர தினத்தையொட்டி இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 448 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. சென்னை, கேகே நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில் பொதுவிருந்தில் முதல்வர் பழனிசாமியும் தமிழிசையும் பங்கேற்றனர். 'ரக் ஷா பந்தன்' பண்டிகையையொட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் முதல்வர் கையில் ராக்கி கட்டினார் தமிழிசை. திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் துணை முதல்வர், பன்னீர்செல்வம், திருவொற்றி யூர் தியாகராஜ சுவாமி கோவிலில், சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர். மற்ற கோவில்களில் அமைச்சர்கள் பங்கேற்றனர். மாவட்டங்களில் உள்ள கோவில்களில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

