இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டம்

1 mins read
cc793dda-5c8b-4197-acf0-f42bc3ecfcae
மட்பாண்டம். படம்: ஊடகம் -

சிவகங்கை: திருப்பு வனம் அருகே கீழடி யில் நடைபெற்றுவரும் அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணவுக் குவளை கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு 47 லட்ச ரூபாய் செலவில் நடந்து வருகிறது. ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய அகழாய்வில் பானை, பானை ஓடுகள், மூடிகள், பழங்காலக் கட்டுமானத்தைப் பறைசாற்றும் சுவர்கள், உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணால் செய்யப்பட்ட மண்குவளை போன்ற மட்பாண்டம் கிடைத்துள்ளது. பெரும்பகுதி சேதமடைந்த நிலையில் இந்தப் பழம்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொல்லியில் துறையினர் விரைவில் ஆய்விற்காக அனுப்ப உள்ளனர்.