சென்னை: இந்தியாவின் சுதந்திர தினமான நேற்று முன்தினம் சென்னை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்தார். அந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்டது குறித்து சபாநாயகர் தனபால் தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், 'ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 'செப்டம்பர் 15 குடியரசு தினம்' என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த டுவிட் இணையத்தில் வேகமாகப் பரவியது. தற்போது அந்த டுவிட் நீக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினமா? குடியரசு தினமா? சபாநாயகருக்கே சந்தேகம்
1 mins read

