142.5 மில்லியன் லிட்டர் குடிநீர்

142.5 மில்லியன் லிட்டர் குடிநீர்

1 mins read

ஜோலார்பேட்டை: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயில் ஜூலை 12ஆம்தேதி ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்டது. அப்போதிருந்து நேற்று முன்தினம் வரை 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சென்னை மாநகர மேற்குப் பகுதிகளில் விநியோகிக் கப்படுகிறது .

ஒரு தடவை ரயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் தமிழக அர சுக்கு செலவாகிறது. இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் ரூ.4.73 கோடி சம்பாதித்துள்ளது. கூடுதலாக இரு ரயில்கள் இயக்க மெட்ரோ அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.