திருவண்ணாமலை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி இருக்கிறார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் உடல் நலம் பெற வேண்டி அவரின் மூத்த மகன் விஜயபிரபாகரன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். இதையடுத்து சிறப்பு பூஜைகளிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

