கின்னஸ் சாதனை முயற்சி: 366 நாட்களுக்கு தொடர் நாட்டியம்

கின்னஸ் சாதனை முயற்சி: 366 நாட்களுக்கு தொடர் நாட்டியம்

1 mins read
e184a136-14a1-4c81-a1df-e876b26d4d99
சாதனை முயற்சியில் பங்கேற்ற நடனமணிகளில் சிலர். படம்: ஊடகம் -

சென்னை: ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் சாதனைக்காக 'நாட்டிய திருவிழா-366' என்னும் கலைநிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 366 நாட்களுக்கு பாரம்பரிய நாட்டியங்களை நடத்தும் இந்த நிகழ்வு கடந்த ஜூலை 8ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது.

பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி உட்பட எட்டுவிதமான பாரம்பரிய நடனங்கள் பல்வேறு அரங்கங்களில் நடத்தப்படுகின்றன.

முதல் நாளன்று ஒருவர் மட்டும் நடனமாட, இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இரண்டாம் நாள் இருவர்; மூன்றாம் நாள் மூவர் என்று நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாட்டியமாடுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகும்.

அதன்படி அடுத்த ஆண்டு 366வது நாளில் 366 பேர் பங்கேற்கும் சிறப்பு நடனத்துடன் நிகழ்ச்சி நிறைவுறும். கின்னஸ் சாதனை குறித்து அதன் பின்னர் தெரியவரும்.