உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அமமுக

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனால் அமமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. தினகரன் அறிவிப்பையடுத்து, தேர்தல் பிரசார பணிகளை அக்கட்சி நிர்வாகிகள் விரைவில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தனது ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் கலந்து கொண்டார் தினகரன். பக்தர்

களுக்கு அன்னதானம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிடாதது தவறு என்றார்.

ஏற்கெனவே கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் அதிமுக அரசு கோட்டைவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதே போன்று நீலகிரியிலும் நடந்துவிட் கூடாது என்றார்.

“நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

“உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. எனவே உள்ளாட்சித் தேர்தலில் அமமுக நிச்சயமாகப் போட்டியிடும்,” என்றார் தினகரன்.

முன்பு பொதுச்சின்னம் கிடைக்கும் வரை அமமுக தேர்தலில் போட்டியிடாது என்று தினகரன் அறிவித்திருந்தார்.

மேலும் பொதுச்சின்னம் கிடைக்காவிட்டால் விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடாது என்று கருதப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என தினகரன் தற்போது அறிவித்துள்ளார்.

முன்னதாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்து சேர்ந்த தினகரனுக்கு சிலர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்றவில்லை என்றும் பொதுமக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக ஆர்.கே.நகரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக அமமுகவினரும் முழக்கமிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!