ராமேசுவரம்: தொலைபேசியில் தொடர்புகொண்டால் ராமேசுவரத்தில் வீடு தேடி மதுப்புட்டிகள் வருகின்றன. அங்கு கடந்த சில மாதங்களில் பல மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பலர் மதுப்புட்டிகளை அதிக அளவில் வாங்கி அவற்றை வீடு தேடிச் சென்று கொடுக்கும் முகவர்களைப் போல் செயல்படுகின்றனர். ஒரு மதுபுட்டிக்கு கூடுதலாக ஐம்பது ரூபாய் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது. நீண்ட தூரம் உள்ள மதுக்கடைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த முகவர்களிடம் மது வாங்குகின்றனர். இத்தகைய முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வீடு தேடி வரும் மதுப்புட்டிகள்
1 mins read

