பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்த இருவர் மரணம்

1 mins read

நாகை: பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத் திணறி தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள வெளிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நகராட்சி பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணி தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அப்போது பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்து முதலில் இறங்கிய சக்திவேல் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதித்த மாதவன் என்பவரும் மயங்கி விழ நேர்ந்தது. இந்நிலையில் இருவருக்கும் மூச்சுத்திணறல் அதிகரித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.