2,000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

2,000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

1 mins read

ராமேஸ்வரம்: மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2,000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சுமார் 200 படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கடல் எல்லையைக் கடந்து வந்து மீன்பிடித்ததாகக் கூறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. அத்துடன், மீன்பிடிக்க விடாமல் அவர்கள் அப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.