சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள் வரும் 21ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவருவதால் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளைச் சிறைபிடிப்பதைக் கண்டித்தும் லாரி உரிமையாளர்கள்மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திரு நிஜலிங்கம் கூறினார்.
தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
1 mins read

