காதலனுடன் வாழ கணவனுக்கு 71 ஆடுகள்

காதலனுடன் வாழ கணவனுக்கு 71 ஆடுகள்

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிப்ரியாச் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அண்மையில் ரமேஷ் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் அந்தப் பெண் உமேஷ் என்ற தன் காதலனுடன் குடும்பம் நடத்தப்போய்விட்டார். இதையறிந்த கணவர், கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.

புகாரை விசாரித்த கிராம பெரிய மனிதர்கள், அந்தப் பெண் தன் காதலனுடன் வாழவேண்டுமானால், 71 ஆடுகளை கணவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

அதன்படி உமேஷ் தன் 71 ஆடுகளை அந்த பெண்ணின் கணவருக்குக் கொடுத்துவிட்டு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். இந்த ஏற்பாடு பிடிக்காத காதலனின் தந்தை, தன் ஆடுகளை ரமேஷ் கடத்திச் சென்றுவிட்டதாக போலிசில் புகார் தெரிவித்தார். விசாரணை நடக்கிறது.