தமிழக வீரருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தமிழக வீரருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

1 mins read

சென்னை: தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தரும் வகையில் 'தோஹா' ஆசிய தடகளப் போட்டியில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த திருச்சி மாவட்டம், வலிதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் வகையில் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதன்படி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் ராஜீவிடம் நேரில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார். படம்: ஊடகம்