நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்து

நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்து

1 mins read

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில் 2வது நாளாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் பழனிசாமி பேசியபோது, "விவசாயிகள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைக் கண்ணின் இமைபோல பாதுகாக்கவேண்டும். பருவ காலத்தில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது. ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் சிறு குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளைச் சீரமைக்க 1,250 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.