இடுகாட்டிற்கு செல்ல பாதை மறுப்பு; பாலம் வழி சடலத்தை இறக்கிய கொடுமை

இடுகாட்டிற்கு செல்ல பாதை மறுப்பு; பாலம் வழி சடலத்தை இறக்கிய கொடுமை

1 mins read

வேலூர்: இடுகாட்டுக்கு சடலத்தைக் கொண்டு செல்ல சிலர் மறுப்பு தெரிவித்ததால் மேம்பாலத்தில் இருந்து பிணத்தை தரை இறக்கிய சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நாராயணயுரம் காலனி உள்ளது. பட்டியலினத்தவர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இவர்களுக்கான தனி சுடுகாடு உள்ளது. ஆனால், இங்கு போதிய வசதிகள் இல்லாததால் இறந்தவர்களை பாலாற்றங்கரை இடுகாட்டிற்கு இவர்கள் கொண்டு செல்கின்றனர்.

இந்த இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சுமார் 20 அடி உயரம் உள்ள மேம்பாலத்தில் இருந்து சடலத்தில் கயிற்ைறக் கட்டி கீழே இறக்கி தகனம் செய்தனர். சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தின் உரிமையாளர் நிலத்தைச் சுற்றி முள்வேலி அமைத்து வழிவிட மறுத்ததாகவும்் கூறப்படுகிறது.