ரூ.5க்கு சாப்பாடு போடும் எம்எல்ஏ

ரூ.5க்கு சாப்பாடு போடும் எம்எல்ஏ

1 mins read

அமராவதி: தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த தெற்கு விசாகப்பட்டினத்தின் எம்எல்ஏ வசுபள்ளி கணேஷ் குமார் தனது சொந்த செலவில் 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி மக்களின் பசிப் பிணியைப் போக்கி வருகிறார்.

கிங் ஜார்ஜ் மருத்துவ மனையில் கடந்த வாரம் அண்ணா உணவகத்தை தொடங்கிய இவர், அங்கு வரும் நோயாளிகளுக்கும் ஏழை களுக்கும் மீண்டும் ரூ.5க்கு உணவு வழங்கி வருகிறார்.

சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திர மாநிலம் முழுவதும் அண்ணா உணவகம் தொடங்கப்பட்டு ரூ.5க்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அங்குள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையிலும் அண்ணா உணவகம் தொடங்கப்பட்டு அங்கு தினமும் வரும் ஆயிரக் கணக்கானோர் வயிறார உணவுண்டு வந்தனர்.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து இடங்களிலும் உள்ள அண்ணா உணவகம் மூடப்பட்டது. இது நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.