புதுடெல்லியை உலுக்கிய திமுக போராட்டத்தில் ஒருமித்த குரல்

புதுடெல்லி:  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகையை மத்திய அரசு அண்மையில் நீக்கி  நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தன. 

திமுக அதன் தீவிரத்தை வெளிப்படுத்த டெல்லியில் போராட்டம் நடத்தியது. கூட்டணிக் கட்சியினரும் அதில் கலந்துகொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.

டெல்லியை ஒரே நாளில் திரும்பிப் பார்க்க வைத்த திமுக போராட்டத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை. நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  அவர் பிஎச்டி பட்டம்பெற இருந்ததே காரணம் என்று தெரிகிறது.

Loading...
Load next