மேட்டூர் நீர்மட்டம் 117 அடி

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று  117 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 18,000 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 88.795 டிஎம்சியாக இருந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரும் கிழக்கு, மேற்குக் கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

கர்நாடகாவில் மழை குறைந்த போதும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தண்ணீர் வந்தபடியே உள்ளது.

Loading...
Load next