மொரீசியஸில் எம்ஜிஆர் சிலை: துணை முதல்வர் திறந்துவைப்பார்

சென்னை: சென்னையில் தயாராகிய மார்பளவு எம்ஜிஆர் சிலை  நேற்று மொரீசியஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்டது. 

அங்குள்ள தமிழர் ஐக்கியம் என்ற இடத்தில் இந்தச் சிலை பீடத்துடன் நிறுவப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

அந்தச் சிலை 2.5 அடி உயரமும் அகலமும் உள்ளது. துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சிலையை வரும் செப்டம்பர் 29 ல் திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மொரீசியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அண்மையில் சென்னை வந்தார். அவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடர்பான சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

அப்போது, மொரீசியஸ் நாட்டிலும் எம்ஜிஆர் சிலையை நிறுவ முடிவெடுத்து அதற்கான ஒப்புதலை முதல்வர் பழனிசாமியிடம் கோரினார். இதற்கு ஒப்புதல் அளித்த முதல்வர், சிலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி  உத்தரவிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கோப்புப்படம்

15 Sep 2019

டிடிவி தினகரன்: கல்வியாளர்களின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தமிழக அரசு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் பழனிசாமியும். கோப்புப்படம்.

14 Sep 2019

ஓபிஎஸ் சிங்கப்பூர் பயணம்