தீவிரவாதிகளுக்கு விரித்த வலையில் சிக்கிய வங்கிக் கொள்ளையன்

பெரம்பலூர்: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை  விடுத்த தகவலை அடுத்து போலிசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூரில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது  ஆட்டோவில் குடிபோதையில் வந்தவரிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலிசார் அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் திருச்சி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கடந்த 20ஆம் தேதி திருச்சி சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை திசைதிருப்பி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த அவன், தற்போது தீவிரவாதிகளுக்கு விரிக்கப்பட்ட வலையில் நேரடியாக வந்து சிக்கிக்கொண்டான்.