சாலையில் வீசப்பட்ட கடிதங்கள்

சாலையில் வீசப்பட்ட கடிதங்கள்

1 mins read

அவிநாசியில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகிக்க வேண்டிய காப்பீட்டு நிறுவனத் தபால்கள், வங்கிகளின் சேமிப்புக் கணக்குப் புத்தகம், வங்கிக் காசோலைகள், ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை, பல்கலைக்கழகச் சான்றுகள் என ஏராளமான தபால்கள், முக்கிய ஆவணங்கள் சாலையில் கிடந்தன. மக்கள் அதைக் கண்டு திடுக்கிட்டு அவற்றை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். படம்: தமிழக ஊடகம்