நாட்டு மாடுகளைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியத்தோடு ஒன்றியவை நாட்டு நாய்கள். ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்துள்ளன. நாட்டு நாய் இனங்களை அழிவில் இருந்து காத்து, மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள 'ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹௌண்ட்ஸ்' எனும் இக்குழு சமூக வலைதளங்களில் நாட்டு நாய் ஆர்வலர்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டெடுத்ததுபோல் நாட்டு நாய்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறது இந்த இளையர் குழு.
இளைஞர்கள் பல ஊர்களில் பண்ணைகள் அமைத்து நாட்டு நாய் இனங்களை மீட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
"நாட்டுநாய்கள் வளர்ப்பு குறித்து படித்த இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப்பதால், அவை அழிவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன," என்று இந்த கூறுகின்றனர் இளையர்கள். படங்கள்: ஊடகம்

