வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது அரசு

வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது அரசு

1 mins read

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வேதாரண்யத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. வேதாரண்யத்தில் ஜீப்பில் வந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது தவறுதலாக மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு பின் பெரிய கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த சண்டை முற்றவே சாலையில் சென்று கொண்டிருந்தவரின் காரை வழிமறித்து தீவைத்து ஒரு பிரிவினர் எரித்தனர். அதேபோல் இன்னொரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டது.