இயற்கை உரங்களுக்கு வரவேற்பு

இயற்கை உரங்களுக்கு வரவேற்பு

1 mins read

மதுரை: இயற்கை உரங்களால் விளைவிக்கப்படும் அரிசி, காய்கறிகள் அதிகமான விலையில் விற்கப்பட்டாலும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆதலால் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டு மாடுகளின் எருக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாட்டு மாடுகளின் எருக்கள் உள்ளூர்த் தேவை போக எஞ்சியது கேரள மாநிலத்திற்கும் ஏற்றுமதியாகிறது.