விஜயகாந்த் மீண்டும் எழுச்சி பெறுவார்

விஜயகாந்த் மீண்டும் எழுச்சி பெறுவார்

1 mins read

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், நாட்டிலேயே தன்னுடைய பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடும் ஒரே தலைவர் விஜயகாந்துதான். தன்னுடைய பிறந்த நாளில் ஏழைகள் பயன்பெற வேண்டும் என நினைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே விஜயகாந்த் உடல் நிலை குறித்து பொது மக்களிடம் வதந்தி பரப்பி வருகின்றனர். வரும் ஜனவரி மாதம் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் வருவார் என்றார். அப்போது விஜய பிரபாகரன் கண்கலங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.