'கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே திமுகவில் பதவி'

'கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே திமுகவில் பதவி'

1 mins read

சென்னை: திமுகவில் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே பதவி வழங்கப்படுகிறது என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை கிண்டலடித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் 'அரசு வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும்படி டுவிட்டரில் கருத்து பதிவிட்ட தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை, அரசு வேலைகளில் தமிழருக்கே முன்னுரிமை என திமுக இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் திமுக கட்சியின் பதவிகள் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே, முன்னுரிமையும் முதல் உரிமையும் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே, அண்ணா குடும்பம் எங்கே? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.