கிராமத்தில் புகுந்த கடல்நீர்

கிராமத்தில் புகுந்த கடல்நீர்

1 mins read

குமரி: குமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அழிக்கால் மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்ததால் பலர் தவிப்புக்கு ஆளாகினர்.

அக்கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

குமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக கடல் சீற்றமும், சூறைக்காற்றும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரமும் இக்கிராமத்தில் கடல் நீர் புகுந்ததால் 70 வீடுகள் பாதிக்கப்பட்டன. தூத்தூர், நீரோடி, வள்ளவிளை பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.