கோவையில் 5 இடங்களில் அதிரடி சோதனை

கோயம்புத்தூர்: தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்துத் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுத் தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது.

பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்துக் கோவையில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின்பேரில் கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.

கோவையிலும் சந்தேகத்தின்பேரில் 4 இளையர்களைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடமும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.

ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில் கோவையில் படிப்படியாகப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. முக்கிய இடங்களை மட்டும் காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். கோவை, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் யாராவது ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது இலங்கைக் குண்டு வெடிப்புப் பயங்கரவாதி ஜக்ரைன் ஹசீமின் காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகக் கோவை உக்கடம், கோட்டைமேடு, பிலால் நகர் பகுதிகளைச் சேர்ந்த உமர்பாரூக், சனாபர் அலி, சமேசா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகிய 5 பேர் சிக்கினர். அவர்களது வீடுகளில் நேற்று காலை 5 மணிக்குப் புகுந்த தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கொச்சி, கோவையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் ஐந்து பேர்களின் வீடுகளில் இருந்து 7 கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏழு அரபுமொழி புத்தகங்களும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இலங்கைக் குண்டு வெடிப்புப் பயங்கரவாதி ஜக்ரைன்ஹசீமின் காணொளியைப் பரப்பிய குற்றத்துக்காக உமர் பாரூக், சனாபர் அலி, சமேசா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகிய ஐந்து பேரிடமும் மேலும் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் 5 பேரும் நாளை நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த 5 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக சோதனை நடத்தியுள்ளனர்.

அது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அப்போது எந்தத் தடயங்களும் கிடைக்காததால்யாரும் கைது செய்யப்படவில்லை.

கோவையில் 6 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவை மக்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாகவே மாறி இருந்தது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் ஒருவித பீதியும் நிலவியது. 2 நாட்களுக்கு முன்னர்தான் காவல்துறை பாதுகாப்பு ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் காணொளியைப் பகிர்ந்ததாகக் கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பிடிபட்டுள்ளதும் அவர்களது வீடுகளில் அதிரடிச் சோதனை நடைபெற்று வருவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!