திண்டுக்கல் பூட்டுக்கும் கண்டாங்கிச் சேலைக்கும் புவிசார் குறியீடு

திண்டுக்கல் பூட்டுக்கும் கண்டாங்கிச் சேலைக்கும் புவிசார் குறியீடு

1 mins read

திண்டுக்கல்: தனிச் சிறப்பு, தனி வரலாறு, உற்பத்தி முறை, தனி அடையாளம், இடம் ஆகியவற்றைக் கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. இந்தச் சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளப்பட்டிச் சுங்குடி சேலை, ஆரணி பட்டுச் சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டிப் பொம்மை, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் காரைக்குடி கண்டாங்கிச் சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்குத் தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையைப் பெறுகின்றன.