சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்தார். அதில் மதிமுகவை உடைக்க திமுக தலைவர் கருணாநிதி (அப்போதைய முதல்வர்) முயற்சி செய்ததாக கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுதலை செய்து நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.

