மயிலாடுதுறை: மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் 'தமிழுக்காக வாழ்வோம்; தமிழாய் வாழ்வோம்' என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடந்தது. சென்னை அறிவியல் நகரம் அமைப்பின் துணைத் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியு மான சகாயம் இவ்விழாவில் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், "நம்முடைய பெருமைகளை நம்மைவிட மேலைநாட்டவர்கள் உணர்ந்துள்ளனர். தனித்து இயங்குகிற கூட்டமைப்பு உடையது தமிழ்மொழி. ஆங்கிலம் தேவை என்று எனக்குத் தெரியும். அதேநேரத்தில் ஆங்கில மோகத்தைத் தவிர்க்க வேண்டும். ஆங்கில ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அம்மொழி மீதான மோகம் தணியும். தமிழ்மொழியை நேசிப்பது என் தாயை நேசிப்பதற்கு ஒப்பானது. இதுதான் நெறி," என்றார்.
தமிழ்மொழியை நேசிப்பது தாயை நேசிப்பதற்குச் சமம்: சகாயம்
1 mins read
தனித்து இயங்குகிற கூட்டமைப்பு உடையது தமிழ்மொழி. ஆங்கிலம் தேவை என்று எனக்குத் தெரியும். அதேநேரத்தில் ஆங்கில மோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சென்னை அறிவியல் நகரம் அமைப்பின் துணைத் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம். -

