மூட்டை மூட்டையாக குட்கா: பெண் உள்ளிட்ட நால்வர் கைது

மூட்டை மூட்டையாக குட்கா: பெண் உள்ளிட்ட நால்வர் கைது

1 mins read
0497bebe-40bd-4319-94cb-8b891b958a4d
-

போரூர்: பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நாகல்கேனி பெரியார் நகர் செங்குவேல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை அந்த வீட்டிற்குச் சென்ற போலிசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஓர் அறையில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கிவைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து 2 டன் குட்கா, சொகுசு கார் மற்றும் ரூ. 2 லட்சத்து 37ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலிசார், வீட்டின் உரிமையாளர்களான ராஜேந்திரன் அவரது மனைவி ராணி, மகன் ராதாகிருஷ்ணன், ஊழியர் விஜயராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.