பஞ்சாமிர்தம் கடைக்காரர்கள் வீட்டில் 56 கிலோ தங்கம் பறிமுதல்

பஞ்சாமிர்தம் கடைக்காரர்கள் வீட்டில் 56 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read

பழனி: பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கமும் 2 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை கடை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 30ஆம் தேதி முதல் 3 நாட்களாக இந்த சோதனை நடந்துவந்தது.