சென்னை: அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுகவிற்கு தாவிய நிலையில், காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் வகையில், புதிதாக 19 மாவட்ட செயலர்களை அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் நியமித்துள்ளார்.
தென் சென்னை மாவட்ட செயலராக கண்ணன், திருவள்ளூர் மாவட்ட செயலராக பொன்.ராஜா, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலராக ஏழுமலை, மத்திய மாவட்ட செயலராக மலைமேகம், தெற்கு மாவட்ட செயலராக லக்கி முருகன் உள்ளிட்ேடார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

