நடிகர் விஜய், மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நடிகர் விஜய், மு.க.ஸ்டாலின் சந்திப்பு

1 mins read
41aaf1f8-bf38-4a6e-8c0c-1d9a5940f9fc
நடிகர் விஜய்யை வரவேற்ற மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

நடிகர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கலைஞர் கருணாநிதியின் மகளான செல்வியின் பேத்தி ஓவியாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய்க்கும் அழைப்புவிடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, மு.க.ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் அவரை வரவேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் சீமான் அளித்த பேட்டி ஒன்றில், "நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற தகுதியானவர் தம்பி விஜய்" என்று பாராட்டி இருந்தார்.

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் நிலையில் சீமான் இவ்வாறு குறிப்பிட்டது மேலும் அனுமானங்களை அதிகரித்தது. நாம் தமிழர் கட்சியுடன் விஜய் நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் ஸ்டாலினுடனான சந்திப்பின் மூலம் நடிகர் விஜய் எந்த ஒரு அரசியல் சார்பு நிலையையும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதாக கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்