சென்னை: மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் பதவி கொடுப்பது குழந்தைகளுக்கு ஏதோ 'சாக்லெட்' கொடுத்து ஏமாற்றுவதுபோல் உள்ளது என்று நேற்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். "அமமுகவிலிருந்து வேண்டு மானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம். ஆனால் அதிமுகவில் இருந்து யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள். அதிமுகவை விழுங்க திமுக முயற்சித்து வருகிறது. திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத அதிமுக விலாங்கு மீன்," என்று கூறினார்.
அதிமுக விலாங்கு மீன்
1 mins read

