சென்னை: சென்னையில் நேற்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.29,832க்கு விற்பனையானது.
தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தைத் தாண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு முன்னுரைக்கப்பட்டது. அதன்படியே ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.29,616க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த நிலையில் நேற்று ரூ.29,832க்கு விற்பனையானது.
அனைத்துலக பொருளாதாரம், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

