வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான கே.பாண்டியராஜன் நேற்று காலை எகிப்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதுதவிர சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்ச ரான கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்தார். அத்துடன் தொழிலாளர் துறை அமைச்சரான நிலோஃபர் கபீர், ரஷ்யாவில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றிருந்தார்.
அதுமட்டுமின்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்து சென்றிருந்தார்.
தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருவ தால் எதிர்க்கட்சியினர் கடுமை யாக விமர்சித்து வருகின்றனர்.

