அடையாறு: தொழில் அதிபரைக் கொன்று அவரது உடலை கடலில் வீசிய வழக்கின் தொடர்பில் கைதான பிரீத்தி ஒரு வழக்கறிஞராவார். இவர் இனிமேல் வழக்கறிஞர் தொழில் செய்யக் கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
கொலை வழக்கில் கைதான பிரீத்தி தொடர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்க போலிசார் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு நீதி மன்றத்திலும் வழக்கறிஞராக முன்னிலையாக முடியாதபடி பிரீத்திக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.சென்னை அடையாறைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ், 50. தொழிலதிபரான இவர் கடந்த ஜூன் மாதம் கடலில் கொல்லப்பட்டார்.

