27 கிணறுகள், குளங்கள் காணாமல் போனதாக வழக்கு

27 கிணறுகள், குளங்கள் காணாமல் போனதாக வழக்கு

1 mins read

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நகரின் கடற்கரைப் பகுதியான ஈஞ்சம்பாக்கத்தில் தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்புகேணி ராவுத்தர்கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகளையும் குளங்களையும் காணவில்லை எனக் கூறி சென்னை உயர் நீ்திமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த 27 கிணறுகளும் குளங்களும் எங்கே என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காணாமல் போன கிணறு, குளங்கள் பற்றி சென்னை மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் வரும் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.