'பசுவின் கோமியம் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்'

'பசுவின் கோமியம் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்'

1 mins read

கோவை: பசுவின் கோமியம் விரைவில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறவிக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராய்ச்சி அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், "பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் இது புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துப்பொருளாக அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"மதுரை, தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்டப் பணிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும் அவர் கூறினார்.